

சந்திர கிரகணம் இந்த ஆண்டு வருகிற ஜூலை 17-ந்தேதி நள்ளிரவு 1.31 மணி முதல் அதிகாலை 4.23 மணி வரை நிகழ உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு மூடப்படுவது வழக்கம்.
அதன்படி சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஜூலை 16-ந்தேதி இரவு 7 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரை திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது.
அதன்பின் அதிகாலை 5 மணிக்கு மேல் கோவில் திறக்கப்படும். புண்ணியா வாசனம், சுத்தி உள்ளிட் டவை நடத்தப்பட்டு சுப்ரபாத சேவை நடக்கிறது.
இதனால் ஜூலை 16 மற்றும் 17-ந்தேதிகளில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த 2 நாட்களில் மண்டபங்களில் பக்தர்கள் காத்திருக்க அனுமதி வழங்கப்படாது.
சந்திரகிரகணத்தையொட்டி அன்ன கூடமும் மூடப்படும் என்பதால் உணவு வினியோகம் செயல்படாது என்றும் தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்களுக்கும் இது பொருந்தும்.
இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.