

புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் கடந்த மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார்.
இதேபோல், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர் கடந்த 8-ம் தேதி காலமானார்.
இதையடுத்து, காலியாக உள்ள இரு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.