குடிபோதையில் போலீசாருடன் தகராறு - வாலிபருக்கு நூதன தண்டணை

கோவையில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டணை வழங்கியுள்ளது.
குடிபோதையில் போலீசாருடன் தகராறு - வாலிபருக்கு நூதன தண்டணை
Published on

கோவை:

கோவை கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சுதர்சன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் குடிபோதையில் கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் சுதர்சன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜே.எம். கோர்ட்டு-2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசாருடன் தகராறு செய்த வாலிபர் சுதர்சனுக்கு நூதன தண்டனை வழங்கினார். எந்த இடத்தில் தகராறு செய்தாரோ அதே இடத்தில் 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து சுதர்சன் ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக போக்குவரத்தை சரி செய்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com