குடிபோதையில் கார் ஓட்டியதை தடுத்த போலீசுக்கு முத்தமழை பொழிந்த பெண்

கொல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தமழை பொழிந்துள்ளார்.
குடிபோதையில் கார் ஓட்டியதை தடுத்த போலீசுக்கு முத்தமழை பொழிந்த பெண்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார். அவருடன் மற்றொரு பெண்ணும், ஒரு ஆணும் காரில் பயணம் செய்துள்ளனர். அளவுக்கு மீறிய போதை காரணமாக, அந்த பெண்ணால் காரை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை.

பைபாஸ் சாலையில் சிங்ரிகட்டா மோர் என்ற இடத்தில்வந்தபோது, கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியது. அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அந்தப் பெண், அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணை காரில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தார். ஆனால், அந்தப் பெண் திடீரென போலீஸ்காரரை உள்ளே இழுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com