ஷேர் ஆட்டோவில் இருந்து பெண்ணை தள்ளிய டிரைவர்

இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஷேர் ஆட்டோவில் இருந்து பெண்ணை தள்ளிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஷேர் ஆட்டோ (கோப்புபடம்)
ஷேர் ஆட்டோ (கோப்புபடம்)
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள கொசவன்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரண்யா. நேற்று இரவு அவர் பெரியபாளையத்தில் இருந்து கொசவன்பேட்டைக்கு வருவதற்கு ஷேர் ஆட்டோவில் ஏறினார்.

ஆரணி தெலுங்கு காலனியை சேர்ந்த செந்தில் முருகன் ஆட்டோவை ஓட்டினார்.

கொசவன்பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் சரண்யா இறங்குவதற்காக ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார். ஆனால் டிரைவர் செந்தில் முருகன் ஆட்டோவை அங்கு நிறுத்தாமல் அருகில் உள்ள மதுக்கடை எதிரே நிறுத்தியதாக தெரிகிறது.

இதனை சரண்யா கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த டிரைவர் செந்தில் முருகன் திடீரென ஆட்டோவில் இருந்த சரண்யாவை கீழே தள்ளி விட்டார். மேலும் தரக்குறைவாகவும் திட்டினார்.

இதனால் அவமானம் அடைந்த சரண்யா அழுதபடி ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப் பதிவுசெய்து ஆட்டோ டிரைவர் செந்தில் முருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com