ராமநாதபுரம்-விருதுநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ராமநாதபுரத்தில் இன்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்-விருதுநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற் பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகர், ராமநாதபுரம் நகரச் செயலாளர் கார்மேகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அகமது தம்பி, கீழக்கரை நகரச் செயலாளர் பசீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விருதுநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் தேசப்பந்து திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com