

திண்டுக்கல்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜப்பா, துணை அமைப்பாளர்கள் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சூசைராபர்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், பெருமாள்சாமி, இலக்கிய அணி முருகானந்தம், விவசாய அணி இல.கண்ணன், நகர துணை செயலாளர் ஜானகிராமன், நகர பொருளாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சிலர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டனர். தி.மு.க இளைஞரணியின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட100 பேரை கைது செய்தனர்.