தமிழ் இருக்கை அமைய தி.மு.க. ரூ.1 கோடி நிதி: அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்பு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தி.மு.க. ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்ததை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார்.
தமிழ் இருக்கை அமைய தி.மு.க. ரூ.1 கோடி நிதி: அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்பு
Published on

சென்னை:

பத்ம விபூஷண் விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை, அமைச்சர் மாபா பாண்டியராஜன் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  தமிழ் இருக்கை அமைவதற்காக தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி தருவதை வரவேற்கிறோம். இந்த நிதியை தி.மு.க. மிக விரைவில் வழங்க வேண்டும். தமிழ் இருக்கை அமைய தேவையான தொகையில் எஞ்சியுள்ள ஒரு கோடி ரூபாய் நிதி இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை கனவு எட்டிவிடும் தூரத்தில் உள்ளது.

தமிழ் மொழியில் புதிதாக 2500 சொற்கள் அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணை வெளியிட உள்ளோம். புதிய சொற்களை உருவாக்கும் பணியில் வைரமுத்து மகன் மதன்கார்க்கி செய்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com