பரமத்திவேலூரில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

பரமத்திவேலூரில் டெங்கு காய்ச்சலை தடுக்க தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூரில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
Published on

பரமத்திவேலூர்:

தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க சார்பில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பொறுப்பாளர்கள் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நில வேம்பு கசாயங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி பரமத்தியில் திருச்செங்கோடு செல்லும் பேருந்து நிறுத்தம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயங்களை வழங்கி பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது தி.மு.க பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com