கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தேமுதிக பொதுக்கூட்டம்

தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தேமுதிக பொதுக்கூட்டம்
Published on

கோவை:

தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் தே.மு.தி.க.வில் இணைந்தனர். மாவட்ட அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்தகுமார், வனிதா துரை, செயற் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்துகுமார், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத், பகுதி நிர்வாகிகள் ராஜா, கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com