சென்னையில் நாளை நடக்க இருந்த தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் ரத்து

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நாளை நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை நடக்க இருந்த தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் ரத்து
Published on

தே.மு.தி.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு திடீர் என்று ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை கிலோ ரூ.13.50-ல் இருந்து, ரூ.25 ஆக உயர்த்தியது. இந்த விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

தற்பொழுது சென்னையில் தொடர் மழையின் காரணமாகவும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com