கொலை வழக்கில் கைதான வாலிபர் தற்கொலை

புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கில் கைதான வாலிபர் தற்கொலை
Published on

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சாளரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த மார்ச் மாதம் ராஜவாய்க்கால் கரையில் சாமிதுரை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

எனவே விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com