தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலியின் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.ராஜேஷ் என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணை தெரிய வந்தது.
கைதான ராஜேஷ்
கைதான ராஜேஷ்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ஜெயசீலி (வயது 70). இவர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயசீலி அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்படி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி முத்தையாபு ரம் சந்தோஷ்நகரை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

உடனே தனிப்படை போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 5½ பவுன் தங்க செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com