வாசுதேவநல்லூரில் மதுபாட்டிலால் நண்பரை குத்திய வாலிபர் கைது

சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். படுகாயமடைந்த மாரிச்சாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது செய்யப்பட்ட சண்முகராஜ்.
கைது செய்யப்பட்ட சண்முகராஜ்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த மாரிச்சாமியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com