பாளையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

பொதிகை நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அருணாச்சலத்திடம் இருந்து கஞ்சா,மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்
பாளையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

நெல்லை:

பாளை பெருமாள்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமை யிலான போலீசார் ரோந்து சென்றனர். பொதிகை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பாளை மனக்காவலம் பிள்ளை நகரை சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ. 1400 உள்ளிட்டவை இருந்தது. அவற்றையும், விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அருணாச்சலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com