முக்கூடல் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

விக்னேஷ் மளிகை கடை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனத்தை திருடியதாக மாரி என்ற மாரியப்பன் கைது செய்யப்பட்டார்
முக்கூடல் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

முக்கூடல், பூவையா தெருவை சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

கடந்த 11-ந் தேதி முத்து விக்னேஷ் வீட்டிற்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முக்கூடல், பெரிய வீதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி இருந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து முத்து விக்னேஷ் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக பெருமாள் விசாரணை நடத்தி இருசக்கர வாக னத்தை திருடியதாக சிங்கம்பாறையை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (20) என்பவவரை கைது செய்தார். அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com