பத்தமடையில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார்.
பத்தமடையில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி அருள் செல்வி (வயது 36).

இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த காயமடைந்த அருள்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com