ஆலங்குளத்தில் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பேரணியை தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர்.
பேரணியில் கலந்து கொண்ட  சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
பேரணியில் கலந்து கொண்ட சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

ஆலங்குளம்:

தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் தலைமையில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வருவாய் தாசில்தார் கிருஷ்ணவேல், தேர்தல் தனி துணை தாசில்தார் மாசானமூர்த்தி, தேர்தல் வருவாய் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி ஆலங்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்கள் ஜோகன்னா, ஜெய டேவிசன் இம்மானு வேல், ஜெஸிக்காள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com