வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகள் வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி
Published on

விருதுநகர்

வேளாண் அமைச்சர் 2023-24 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை உரையில் உழவர்களுக்கு அயல்நாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தோட்டக்கலை, வேளாண் பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பெறும் வகையில் இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற அயல்நாடுகளுக்கு சென்று பயன்பெறுவதற்கு உழவர் பெரு மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com