எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து

விருதுநகர் இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் நாராயணன்-மூர்த்தி அம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி(வயது33). இவர் சென்னையில் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்செல்வி அதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே 23-ந்தேதி முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதற்காக ஏற்கனவே தமிழக அரசு அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. இந்த நிலையில் முத்தமிழ்செல்வி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தனது 2-வது முயற்சியாக தற்போது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com