கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை-எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்கப்பட்ட காட்சி.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்கப்பட்ட காட்சி.
Published on

விருதுநகர்

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.கண்ணன் மற்றும் ராஜகம் பள சமுதாய நல சங்கத்தினர் அதிமுக இடைக்கால பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

பின்னர் அவர்கள் ஜனவரி 3-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தன்று மதுரையில் உள்ள அவரது சிலைக்கும், சயத்தாறில் அவர் நினைவிடத்தில் உள்ள உருவச்சிலைக்கும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com