மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் சாவு

மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர். கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் சாவு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). மாடிப்படியில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரியாபட்டி அருகில் உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (41). மாடிப்படியில் தவறி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.dwa

X

Maalai Malar
www.maalaimalar.com