விராலிமலை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
Published on

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பெருமாள் கோவில் கிழக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா நாராயணன். இவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது.

சமையல் அறையில் தீ பிடித்ததால் அங்கிருந்த சிலிண்டரும் வெடித்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின. சவுமியா நாராயணன் உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.

இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி மகேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.

வீட்டில் இருந்த மற்றொரு காலி சிலிண்டர் வெளியே கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தினால் எவ்வித உயிர் சேதமோ எவருக்கும் தீக்காயமும் ஏற்படவில்லை. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சேதமாயின. மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தீ விபத்து நடைபெற்ற பகுதியை டி.எஸ்.பி. முத்துராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com