வேலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்து நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்
வேலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர்:

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com