வேடசந்தூர் யூனியன் தலைவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி

வேடசந்தூர் யூனியன் தலைவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் யூனியன் தலைவராக இருப்பவர் சாவித்திரி. இங்கு மொத்தம் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அ.தி.மு.க. 8, தே.மு-.தி.க. 1, தி.மு.க. 5, காங்கிரஸ் 1 ஆகியோர் உள்ளனர். பெரும்பான்மையுடன் தலைவர் பதவியில் நீடித்த சாவித்திரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பழனி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று வேடசந்தூர் யூனியன் அலுவலகத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என அவர் அறிவித்தார்.

அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீர்மானத்தின் மீது விவாதமும்  அதனைத் தொடர்ந்து வாக்-கெடுப்பும் நடைபெற்றது. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 12 பேர் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. யூனியன் தலைவர் சாவித்திரி தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான யூனியன், பேரூராட்சி பதவிகளை தி.மு.க. கைப்பற்றி வரும் நிலையில் தற்போது வேடசந்தூர் யூனியன் தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

தலைவராக தொட்டணம்பட்டியைச் சேர்ந்த சவுடீஸ்வரி தேந்தெடுக்கப்படுவார் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com