தூத்துக்குடியில் பா.ஜ.க.வினருக்கு வேட்டி, சேலை-உமரி சத்தியசீலன் வழங்கினார்

உமரி சத்தியசீலன், வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கினர்.தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
உமரி சத்தியசீலன் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை,இனிப்பு, பட்டாசுகளை வழங்கிய காட்சி.
உமரி சத்தியசீலன் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை,இனிப்பு, பட்டாசுகளை வழங்கிய காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஸ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் ஆலோசனைப்படி மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத் தலைவர் வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களை நேரில் சந்தித்து வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல் தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் பட்டாசுளை உமரி சத்தியசீலன் வழங்கினார். இதில் மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், சக்தி கேந்திர பொறுப்பாளர் துர்க்கையப்பன், மகளிர் அணி தலைவர் செல்வி, பூத் கமிட்டி நிர்வாகிகள் பாண்டியன், ராஜகோபால், சவுந்தர்ராஜன், சந்தான நிஷாத், மாரிமுத்து, ராஜபாண்டி,விக்னேஷ் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com