உதயநிதி துணை-முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து-எச்.ராஜா

இந்து வாழ்வியலே சனாதானம்.இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
உதயநிதி துணை-முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து-எச்.ராஜா
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com