நாமக்கல்லில் கொரோனா பாதித்த 150 பேருக்கு சிகிச்சை

கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் கொரோனா பாதித்த 150 பேருக்கு சிகிச்சை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 13 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில், 150 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com