பல்லடம் அருகே நண்பனின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது

இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.
எரிந்து சாம்பலான மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
எரிந்து சாம்பலான மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(21) அமல்ராஜ் (22) இருவரும் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் அருகருகே வசிக்கும் இவர்கள் நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் பிரகாசிற்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக இருவரும் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை தனது உபயோகத்திற்காக அமல்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தனக்கு வேலை இருப்பதா கவும் வெளியில் செல்ல வேண்டி இருப்பதா கவும் கூறி பிரகாஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷின் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பிரகாஷின் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பல் ஆனது . இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகார் என் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் கேட்டு கொடுக்காத காரணத்தால் அமல்ராஜ் மோட்டார் சைக்கிள் தீ வைத்தது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அமல்ராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com