பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கி பெண் பலி

வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மல்லிகா அடித்து செல்லப்பட்டார்.கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

காங்கேயம், திருப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 59). இவர் நேற்று அப்பகுதியில் செல்லும் பிஏபி. கிளை வாய்க்காலில் துணி துவைக்க சென்றுள்ளார், அப்போது வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இந்தநிலையில் மல்லிகா வெள்ளகோவில் அருகே உள்ள கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com