உடுமலை நகர தி.மு.க. செயலாளர் நியமனம்

உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வேலுச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடுமலை   நகர  தி.மு.க. செயலாளராக  நியமிக்கப்பட்ட வேலுச்சாமி  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. 
உடுமலை நகர தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட வேலுச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. 
Published on

உடுமலை :

உடுமலை தி.மு.க. நகர செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் சி. வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சே. செல்வராஜ், சொர்க்கம் பழனிச்சாமி, உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், முன்னாள் அமைப்பாளர் குமார்சந்திரன், ஆர். டி. எஸ். தனபால், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி, ரீகன், சாந்தி கிருபாகரன் உள்ளிட்டோர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com