பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்துள்ளார்.அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அம்மு.
கைது செய்யப்பட்ட அம்மு.
Published on

பல்லடம் :

தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு (வயது 21). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவரது தந்தை பழனியுடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அம்மு நேற்று கள்ளக்கிணறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சல் போட்டதாகவும், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அம்முவை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com