மீன் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்தவர் கைது

பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் மணி(வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை - நாரணாபுரம் ரோட்டில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், மணியை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரொக்கம் ரூ.4,500ஐ பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதையடுத்து மணி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகே வசிக்கும் சந்திரசேகர் என்பவரது மகன் நாகேந்திரன் என்கிற முத்துப்பாண்டி(36) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com