பல்லடத்தில் வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது

விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com