மடத்துக்குளத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய தலைவர் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஏற்பாட்டில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்ட காட்சி. 
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்ட காட்சி. 
Published on

மடத்துக்குளம் :

மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி தாந்தோணியில் ஒன்றிய தலைவர் மணியன் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் அகிலேஷ் ஏற்பாட்டில் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் மங்களம் ரவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாநில மேலாண்மை பிரிவு செயலாளர் சாய் பூர்ணிமா, மாவட்ட ஓபிசி. அணி தலைவர் சிவலிங்கம், மாவட்ட ஐடி., பிரிவு தலைவர் குணசேகர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கதிரவன், உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் கௌதமன், பொருளாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடை வழங்கப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com