வேகமாக பரவும் கொரோனா- திருப்பூரில் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள்  மேல்நிலைபள்ளி கலையரங்கில் கொரோனா சிகிச்சைக்காக  அமைக்கப்பட்டுள்ள  படுக்கைகள்.
திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைபள்ளி கலையரங்கில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தினசரி பாதிப்பு திடீரென 127-ஆக மாறியது. 

இதேபோல் நேற்று முன்தினம் அதையும் தாண்டி 226-ஆக அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 219 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 577-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 654-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 728 பேர் திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ் பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணி க்கை 1028-ஆக உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் தொற்று முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை கூடம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி முதல் மண்டலத்தில் சிறுபூலுவப்பட்டி சமுதாய கூடத்தில் பரிசோதனை மையமும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள திருப்பூர் சேவா சமிதியில் 50 படுக்கைகளுடன் சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மண்டல பகுதியில் நெருப்பெரிச்சல் ஜெ.ஜெ., நகர் சமுதாய கூடத்தில் பரிசோதனை மையமும், 3-வது மண்டலத்தில் விஜயாபுரம் சமுதாய கூடத்தில் பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

4-வது மண்டலத்தில் பலவஞ்சிபாளையம் சமுதாய கூடத்தில் பரிசோதனை மையமும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சி களில் உள்ள சமுதாயகூடம் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் தலா 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளது. திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் 150 படுக்கைகள், குமரன் கல்லூரியில் 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்  வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்களுக்கு வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். 8-வதுநாளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறி வித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-

ஒமைக்ரான் வைரஸ், டெல்டாவை போன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் டெல்டாவைவிட மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.உலக அளவில் ஒமைக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

நம் நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. அதேநேரம் ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிந்து அது ‘நெகட்டிவ்’ என வந்தால்  வீட்டுக்கு சென்று 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும்.

8-வது நாளில் அந்த நபர் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாளை 11-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும். இவ்வாறு சுகாதாரத் துறையினர் கூறினர்.

வெளிநாட்டில் இருந்து திருப்பூருக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்படவில்லை என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com