விவசாயிகள் மண் பரிசோதனை செய்து பயன் பெறலாம்-உதவி இயக்குனர் தகவல்

ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும். 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

அவினாசி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் வட்டத்தில் விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசின் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம். உழவன் செயலியில் தமிழ் மண்வளம் பகுதியில் மண்மாதிரி ஆய்வு முன்பதிவு பகுதியில், தங்களது ஆதார் எண், தொலைபேசி எண், ஓ.டி.பி. பெயர், முகவரி, நில விவரங்கள், பயிர் விவரங்கள் கொடுத்து மண் பரிசோதனை நிலையம், திருப்பூர் என பதிவு செய்து கொள்ளலாம். பிறகு மண்ணை ஆய்வகத்துக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு சமர்ப்பிக்கலாம். ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும். பரிசோதனை செய்யப்பட்ட பின் 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com