அவினாசியில் மதுபாட்டில்கள் கடத்திய2 பேர் கைது

அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதானவரையும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் படத்தில் காணலாம். 
கைதானவரையும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் படத்தில் காணலாம். 
Published on

அவினாசி:

அவினாசி போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில அவினாசியை அடுத்து நரியம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அன்னூரை சேர்ந்த நஞ்சப்பன் மகன்பாக்யராஜ் (வயது41) ,அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் மகன் சூரியதேவன் (23) என்பதும் தெரியவந்தது.அவர்கள் வந்த வாகனத்தை சோதனையி ட்டபோது மதுப்பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் அவினாசியை அடுத்து கருவலூரில் டாஸ்மாக் கடையில் 165 மதுபான பாட்டில்கள் வாங்கி அதை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபான பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com