குடிபோதையில் தகராறு செய்து நிதி நிறுவன உரிமையாளரை தாக்கியவர் கைது

கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார். தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

தாராபுரம் குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் , நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பல்லடம் பகுதியில் வசூல் செய்து விட்டு, இரவு நேரம் ஆகிவிட்டதால், பல்லடம் ராயர் பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே தங்கி இருந்த ஒருவர் குடிபோதையில் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் விஜயகுமாரை கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார்.

இதில் காயம் அடைந்த விஜயகுமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விஜயகுமாரை தாக்கிய ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com