பல்லடத்தில் மதுபானம் விற்றவர் கைது

25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கழுவேறிபாளையம், காலனியை சேர்ந்த நாச்சி என்பவரது மகன் கோவிந்தன் (வயது70). இவர் முறைகேடாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கோவிந்தனிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com