காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றிய காட்சி.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றிய காட்சி.
Published on

காங்கயம் :

காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் வரவேற்றார். கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.பி.சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி,காங்கயம் யூனியன் கவுன்சிலர் பாப்பினி மைனர் பழனிசாமி , காங்கயம் நகராட்சி கவுன்சிலர் அருண்குமார், அ.தி.மு.க. பிரமுகர்கள் பி.கே.பி. சண்முகசுந்தரம், என்.எஸ்.என். தனபால் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com