புதிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க அறிவுறுத்தல்

புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந் தேதி முதல் துவங்குகிறது.வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந்தேதி முதல் துவங்குகிறது. மாணவர்களை வரவேற்க வழக்கமாக முதல் சில நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு மாற்றாக விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதும், கதைகள் கூறுவதுமாக துவக்கப்பள்ளிகளில் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:- கல்வியாண்டு துவங்கியதும் முதல் 2 வாரங்கள் வரையிலும் அவர்களின் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவு கூர்ந்து அதற்கான செயல்முறைகளை எளிமையாக நடத்துவதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய பாடங்களை திடீரென நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருப்பதால் இவ்வாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com