குண்டடம் பகுதியில் சின்ன வெங்காய நாற்றுகள் சாகுபடி தீவிரம்

சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நடப்பட்ட சின்ன வெங்காய  நாற்றுகள்
நடப்பட்ட சின்ன வெங்காய  நாற்றுகள்
Published on

 குண்டடம், நவ.23-

குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது

இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.

இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com