வெள்ளகோவிலில் நூல் மில்லில் தீ விபத்து

நூல் மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது.
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்கு மார் ( வயது41) என்பவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளமடை என்ற இடத்தில் நூல் மில் நடத்தி வருகின்றார்.

இந்த மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனே வேகமாக பஞ்சு மற்றும் எந்திரத்தில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் எந்திரங்கள், பஞ்சு மற்றும் கட்டிடங்கள் சேதமாயிற்று சேதங்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது, இந்த தீ விபத்தினால் தொழிலாளர்கள் எவ்வித காயம் இன்றி தப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com