கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பல்லடம், ஆக.19-

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 44). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில் வேலைக்குச் சென்றவர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடம் நோக்கி வந்துள்ளார். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com