திருப்பூர் அருகே சாலையோரம் இறந்து கிடந்த பச்சிளங்குழந்தை - போலீசார் விசாரணை

பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com