வங்கி கடன் தவணையை கேட்ட ஊழியர் மீது தாக்குதல்

7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com