கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்,அக்.22-

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது. அரசும், அரசு ஊழியா்களும், ஆளும்கட்சியும் சா்வாதிகார மனப்பான்மையில் செயல்படுகின்றனா். பாஜக., மாநிலத்தலைவா் அண்ணாமலை வீட்டின் முன்பாக நிறுவப்பட்ட கொடிக் கம்பம் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை எதிா்த்து ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக., நிா்வாகிகள், தொண்டா்கள் என 110 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். என் மண், எண் மக்கள் நடைப்பயணத்தின் இணை அமைப்பாளா் அமா்பிரசாத் ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ளவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். 

X

Maalai Malar
www.maalaimalar.com