தொடா் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நவம்பா் 11-ந் தேதி வி.சந்தோஷ், நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் பணத்தை பறித்துச்சென்றனா். 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் வி.சந்தோஷ். இவா் கடந்த நவம்பா் 11-ந் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் அவரை தூக்கிச் சென்று பணத்தை பறித்துச்சென்றனா். இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக திருப்பூா் காந்திநகரை சோ்ந்த எஸ்.சூா்யா (25), சாமுண்டிபுரத்தை சோ்ந்த நவீன்குமாா் (24), எஸ்.கோகுல்(19) ஆகிய 3 பேரை கடந்த நவம்பா் 28-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சூா்யா மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, 8 வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சூா்யாவை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூா்யாவிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

X

Maalai Malar
www.maalaimalar.com