மங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மங்கலம் போலீசார் 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

மங்கலம் :

மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சமாதா னபிரபு மற்றும் போலீசார் மங்கலத்தை அடுத்த எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அதே பகுதியில் மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜேந்திரன் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இடுவாய் -பாரதிபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முத்துச்செல்வன் (35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அதேபகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பிரின்ஸ் (50)என்பவரை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com